#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படுக்கையறை ரகசியங்களை வெளிப்படையாக போட்டுடைத்த சமந்தா.! நாக சைதன்யாவின் முதல்மனைவி இவரா?
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் பிரபலநடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாகசைதன்யாவும், சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தில் நடித்ததன் மூலம் காதலிக்க துவங்கினார். திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் சமந்தா தனது சொந்த விஷயங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி லட்சுமி மஞ்சு, சமந்தா நீங்களும் நாகசைதன்யாவும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வாழ்ந்தது தெரியும். உங்கள் பெட்ரூம் சீக்ரெட்ஸ் பற்றி சொல்லுங்கள் என கேட்டார்.
இதற்கு சமந்தா தலையணைத்தான் எனது கணவரின் முதல் மனைவி. நான் அவரை முத்தமிட சென்றாலும் எங்கள் நடுவில் தலையணைதான் இருக்கும் என்று கூறினார். மேலும் சமந்தா இதுபோதும். இதற்குமேல் கேட்டால் நான் வேறு எதாவது சொல்லிவிடுவேன் என ஜாலியாக கூறியுள்ளார்.