வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அடடே.! இந்த சின்ன குழந்தை சூர்யா பட ஹீரோயினா.. வைரலாகும் நடிகையின் சிறுவயது புகைப்படம்.!
"மெயினோ தில் துஜ் கோ தியோ" என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட இவர், ஹிந்தியில் தான் நிறைய படங்களை நடித்துள்ளார். அதன் பிறகு தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "வாரணம் ஆயிரம்" படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சமீரா ரெட்டிக்கும் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து இவர் அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் வேட்டை மற்றும் வெடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இதன் பின்னர் இவர் 2014ம் ஆண்டு மும்பையில் அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதுப் புகைப்படத்தை வெளியிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் 'சிறுவயதிலும் சமீரா அழகுதான்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.