வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
"வாழ்க்கையில் இவ்வளவு மோசமான விஷயங்கள் நடக்குமென்று எதிர்பார்க்கல" சமீராவின் மனம் வருந்திய பேட்டி..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு அசல், வெடி, வேட்டை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தாயனார்.
இதற்குப் பின்பு உடல் எடை அதிகமான காரணத்தினாலும், தனிப்பட்ட காரணத்தினாலும் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இந்த நேரத்தில் அவர் சந்தித்த கசப்பான விஷயங்களைப் பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர், "என் உடல் எடை குறித்து என் தோற்றத்தைக் குறித்தும் பலவிதமாக கிண்டல் செய்வார்கள். வெளியே வருவதே பயமாக இருக்கும்" என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் சமீராவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.