படத்தை எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி வெளியிடும்போது இல்லை - சமுத்திரகனி!



Samuthrakani speech about movie direction

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சமுத்திரக்கனி. இவர் ஹீரோ, வில்லன் குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கதைக்கு ஏற்றவாறு நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் நடித்துள்ள யாவரும் வல்லவரே என்ற திரைப்படம் நாளை திரையரங்களில் ரிலீஸாகிறது.

Samuthrakani

இந்த நிலையில் சமுத்திரகனி முன்பை போல் படங்கள் இயக்காவது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். அதேபோல் தான் அடுத்த சாட்டை என்ற படத்தை எடுத்தோம். அதற்கும் இதே நிலைதான்.

படத்தை எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி வெளியிடும் போது இல்லை. அதனால்தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்புக்கான வாய்ப்பு இருக்கும் இடத்தில் வேலை செய்து வருகிறேன். மலையாள திரைப்படங்கள் இங்கு ஓடுகின்றன. தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற நல்ல படங்கள் வருகிறது. சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட உதவுங்கள் என அவர் கூறியுள்ளார்.