பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நெற்றி வகிடில் குங்குமம்! கல்யாணம் ஆகிருச்சா? முதன்முதலாக உண்மையை உடைத்த பிக்பாஸ் சனம் ஷெட்டி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. இவர் மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர். சனம் ஷெட்டி எப்பொழுதும் தனது நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்திருப்பார். அதனை கண்ட ரசிகர் ஒருவர் ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வச்சிருக்கீங்க, உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா? என்று கேட்டுள்ளார்.
Aww haha.. too many asking this question..I'm not married dears..not yet! 🙂 with all ur blessings may be someday❤️
— Sanam Shetty (@SamSanamShetty1) January 27, 2021
Forehead kumkum is not restricted to married women in my home. https://t.co/8UscrSWOnY
அதற்கு சனம் ஆஹா.. நிறைய பேர் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறார்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உங்கள் ஆசியுடன் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என நினைக்கிறேன். நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது எங்க குடும்பத்தில் ஒரு இயல்பான பழக்கம் எனக் கூறியுள்ளார். மேலும் அவர், இது கர்நாடகாவின் சம்பிரதாயம். அங்கு திருமணமாகாதவர்கள் கூட நெற்றி வகிடில் பொட்டு வைப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
It is karnataka tradition bro...Anga marraige aagathavunga kooda forehead la kungumam.vaipaga bro💗
— Sanam army💗💗 (@Karthikkavi48) January 27, 2021