பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இவங்கதான் ஜெயிக்கணும்! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சனம் ஷெட்டி வெளியிட்ட நியாயமான பதிவு!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 73 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இதில் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சனம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர்.
Andha cup illena enna indha cup iruke! 😉
— Sam Sanam Shetty (@SamSanamShetty1) December 16, 2020
My very own coffee cup from Big Boss house! Sooooo many lovely memories ❤️
Good luck to my friends inside BB for the forth coming weeks.
May the most deserving win🤘@vijaytelevision @EndemolShineIND#iloveyoubigboss #bigboss4tamil pic.twitter.com/eTMETtsg6a
இந்த நிலையில் சனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய காபி கப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அந்த கப் இல்லனா என்ன இந்த கப் இருக்கே, பிக்பாஸில் நான் பயன்படுத்திய எனது சொந்த கப், ஏராளமான நினைவுகளை கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் தகுதியானவர் மட்டும் வெற்றி பெறட்டும் என கூறியுள்ளார்.