பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆபரேஷன் சக்ஸஸ்! செம ஹேப்பியாக பிக்பாஸ் சனம் வெளியிட்ட சூப்பரான தகவல்! என்னனு பார்த்தீர்களா!!
அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பிகபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சிந்துவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நடிகை சிந்துவின் ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்துவிட்டது.
ஆனால் தற்போது புற்றுநோய் மேலும் அதிகமாக பரவிய நிலையில் உடனடியாக அடுத்த கட்ட அவசர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்காக 1.6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது முடிந்தவரை உதவுங்கள் என உதவி கேட்டிருந்தார், இதனால் நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான சம்பாதித்த நீங்கள் உதவலாம் என விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது சனம் தனது இணையதள பக்கத்தில் நடிகை சிந்துவின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது . அவருக்கு உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.