#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாண்டி அனைவரையும் பார்க்க வலியுறுத்திய படம் இந்த மாஸ் ஹீரோவுடைய படமா! வீடியோ உள்ளே.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கியவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவருக்காகவே பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர்.
அதிலும் இவரின் குழந்தை தனமாக பேசும் பேச்சு அனைவரையும் அதிகம் கவர்ந்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றார்.தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சாண்டி மூன்று மாதங்கள் நான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வெளியேறி வந்த பிறகு சிட்டியில் பல மாற்றங்களை பார்த்தேன். அதேபோல் கோமாளி படத்தில் ஜெயம் ரவி 16 வருடங்கள் கழித்து வெளியே செல்லும் போது எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக நடித்துள்ளார். எனவே அனைவரும் கோமாளி படத்தை பாருங்கள் என கூறியுள்ளார்.