பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு விருது! என்ன விருது? யார் கொடுத்தது தெரியுமா?
தமிழ் சினிமாவின் தளபதியாக இந்திய அளவில் பிரபாலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார் விஜய். தளபதியின் வெற்றி, தோல்வி என அனைத்திலும் அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி சங்கீதா.
1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு சஞ்சய் ஜேசன் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். ஏற்கனவே அவரது மகன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டுக்கும், மகள் தெறி படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தனது கணவருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் சங்கீதாவுக்கு முதல்முறையாக கலர்ஸ் தமிழ், கலாட்டா.காம் இணைந்து நடத்திய ‘வொண்டர் வுமேன்’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் முடிசூடா தளபதி என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய சங்கீதா தனக்கு கிடைத்த பாராட்டுக்காக நன்றி தெரிவித்தார்.