#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சுஷாந்திற்கு இப்படியொரு ஆசை இருந்ததா.! மிகவும் வேதனையோடு சானியா மிர்சா வெளியிட்ட பதிவு!
பாலிவுட்டில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுஷாந்த் நேற்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, சுஷாந்த் மரணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சுஷாந்த் ஒருநாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். நீ எப்பொழுதும் புன்னகையுடன் இருப்பாய். நீ செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் உனக்குள் இவ்வளவு வலிகள் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.. இதனை எழுதும் பொழுது நடுங்குகிறேன் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Sushant 💔 💔 you said we would play tennis together one day .. you were so full of life and laughs .. spreading smiles everywhere you went.. we didn’t even know you were hurting this bad 😞 the world will miss you .. shaking while I write this .. RIP my friend
— Sania Mirza (@MirzaSania) June 14, 2020