#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சேனலில் புதிய சீரியலில் களமிறங்கும் ராஜாராணி சஞ்சீவ்! சீரியலின் டைட்டில் என்னனு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜாராணி. இந்த தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் சஞ்சீவ். இவர் இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது ராஜாராணி சீரியல்தான்.
சஞ்சீவ் ராஜாராணி தொடரில் தனக்கு ஜோடியாக, மனைவியாக செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசாவை காதலித்து நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டார். அழகிய காதல் தம்பதியினரான இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர்கள் அவ்வப்போது தங்களது மற்றும் மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவர்.
நடிகர் சஞ்சீவ் ராஜாராணி தொடரை தொடர்ந்து காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சஞ்சீவ் அன்மையில் புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் நடிக்கும் புதிய சீரியல் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விஷன் டைம்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலுக்கு கயல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.