#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் கூட்டணி சேரும் பிரபலம்! யார் தெரியுமா?
பேட்ட படத்தை அடுத்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளது இதுவே முதல் முறை என்பதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் AR முருகதாஸ் ரஜினியிடம் கூறிய கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும், மீண்டும் வேறொரு கதையை தயார் செய்து முருகதாஸ் கூற அந்த கதைக்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்பட்டதில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் பற்றி இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் 27 வருடம் கழித்து ரஜினியுடன் கூட்டணி சேர்கிறார் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளரமுமான சந்தோஷ் சிவன்.
1991ம் ஆண்டு வெளியான ரஜினி, மணிரத்னம், இளையராஜா காம்பினேஷனின் சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்துக்குப் பின், அதாவது சரியாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி காம்பினேஷனில் தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவிருப்பதை உறுதி செய்தார் சந்தோஷ் சிவன்.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) February 12, 2019