#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8 ஆண்டுகளுக்கு பிறகு.. சரவணன் மீனாட்சி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு.! குவியும் வாழ்த்துக்கள்!!
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் சரவணனாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். மேலும் மீனாட்சியாக ஸ்ரீஜா நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் அவர்கள் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தனர்.
இந்த நிலையில் சீரியலில் ஜோடியாக நடித்த இருவரும் நிஜத்திலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா இருவரும் மாப்பிள்ளை என்ற தொடரில் இணைந்து நடித்தனர். அதனைத் தொடர்ந்து செந்தில் பல தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். மேலும் அவருக்கு வளைகாப்பு விழா நடந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா ஜோடிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.