#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகருடன் சரவணன் மீனாட்சி மைனாவுக்கு இரண்டாவது திருமணம்.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!
தமிழ் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. இவர் வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல தொடர்களில் மிகவும் சிறப்பாக நடித்ததன் மூலம் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நந்தினியை பலரும் மோசமாக விமர்சனம் செய்தனர். மேலும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் வைத்தனர்.
இருப்பினும் அதனைத் தொடர்ந்து சீரியல், டான்ஸ் ஷோ என பிஸியாக இருந்த நந்தினி நாயகி தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் நிச்சயம் செய்துகொண்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், தற்போது மைனாவும், யோகேஷும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.