#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார்: எங்கெங்கே எவ்வளவு வசூல்? முழு பட்டியல் இதோ!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று சர்க்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல்தான் என்ன? வாங்க பாக்கலாம்.
இதுவரை தமிழ்நாடு அளவில் 33 கோடி வசூல் செய்திருப்பதாக டிரேடிங் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மட்டும் இதுவரை 5.75 கோடியும், கர்நாடகாவில் 4.5 கோடியும், வட இந்தியாவில் 1.5 கோடியும், ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் 2 கோடியும் வசூலாகியுள்ளது. ஆக மொத்தம் இந்தியா முழுவதும் சர்கார் படம் முதல் நாள் வசூலித்த தொகை 46.75 கோடி.
இதுமட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் சுமார் 15 கோடி வசூலாகியுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 5.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே அனைத்தையும் சேர்த்தால் சர்க்கார் படம் முதல் நாளில் வசூலித்த தொகை 62 கோடியாம்.