#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...!
ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் சர்க்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதற்கட்டமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்சமயம் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விரைவில் ஒரு புதிய அறிவிப்பு வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அது எந்த விதமான அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அறிவிப்பை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் . அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருகின்ற 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை அனைவரும் தவறாமல் காணவும். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கேள்விகள் கேட்கப்படும் .
கேள்விகளுக்கு விரைவாகவும் அதிக கேள்விகளுக்கு பதிலும் அளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 250 பேருக்கு சர்க்கார் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் அனுப்புதல் அனுப்பப்பட்ட நபர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் வழிச் செலவுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.