#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தெறிக்க விட்ட விஜய்! மரண மாஸ் காட்டிய சர்க்கார் டீசர்! வீடியோ உள்ளே!
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், விஜய் நடிக்கும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் "சர்கார்" படத்தின் டீசர், விஜய தசமி தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.