#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் வெளியானது சர்க்கார் திரைப்படத்தின் டீசர்! ஆனால் இந்த முறை?
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் "சர்கார்" படத்தின் டீசர், விஜய தசமி அன்று மலை ஆறுமணிக்கு தமிழில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலையே பல சாதனைகளை படைத்தது சர்க்கார் டீஸர்.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சர்க்கார் படம் முழுவதும் அரசியல் கலந்த கலவையாக இருப்பதில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் என்றாலே மாஸ்தான் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியா முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் சர்க்கார் திரைப்படத்தின் டீசர் இன்று தெலுங்கில் வெளியாகியுள்ளது. தமிழில் கிடைத்த வரவேற்ப்பை போன்றே தெலுங்கிலும் சர்க்கார் டீசருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.