#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வின்னர் இவர்தான்.! ஆணியடித்ததுபோல் கூறிய பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று இருப்பினும் அவற்றையெல்லாம் மீறி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வெற்றி பெற வேண்டும்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக சரவணன் மீனாட்சி புகழ் கவின் கலந்துகொண்டுள்ளார் . இவருக்கென ஏற்கெனவே பெரும் ரசிகர்கள் உள்ளனர்.மேலும் இவர் வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் கவின் குறித்து நடன இயக்குனரும், நடிகருமான சதிஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்த்துக்கள், பிக்பாஸ் சீசன் 3ல் மில்லியன் கணக்கான உள்ளங்களை அவர்தான் வெல்வார் என பதிவிட்டுள்ளார்.
Come on boy wishing u good luck . I feel he will win million hearts #bigbosstamil3 pic.twitter.com/iYyDeQdceZ
— Sathish krishnan (@dancersatz) June 25, 2019