#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
“யாராக இருந்தாலும் ஓகே; அவன் மட்டும் வேணாம்" ஆர்யா திருமணத்தில் புதிய சிக்கல்
தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.
ஆனால் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவதாகாவும், அதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஆர்யாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், நடிகை சாயீஷாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஆர்யாவை சாயீஷா திருமணம் செய்துகொள்வதையும் அவர்கள் விரும்பவில்லையாம்.
“யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள், ஆர்யா மட்டும் வேண்டாம்” என்று சாயீஷாவுக்கு அவர்கள் அட்வைஸ் செய்கிறார்களாம். இதனால், ஆர்யா கல்யாணத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.