கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கலாட்டா கல்யாணம்... மணமகனின் தாய்க்கு கத்தி குத்து.!! தந்தை வெறி செயல்.!!
மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட தகராறில் மணமகனின் தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மணமகளின் தந்தை உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
எதிர்ப்பை மீறி திருமணம்
மதுரையைச் சேர்ந்த முத்து என்பவரது மகளை எம்.புதுப்பட்டியை சேர்ந்த அபினேஷ் என்ற 24 வயது இளைஞர் காதலித்திருக்கிறார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்களது எதிர்ப்பையும் மீறி காதலித்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் அபினேஷ். இது தொடர்பாக இரு குடும்பத்தினரிடயே மோதல் நிலவி வந்திருக்கிறது.
மணமகனின் தாய்க்கு கத்தி குத்து
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரு வீட்டைச் சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் மணமகன் அபினேசின் தாயாருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தியது.
இதையும் படிங்க: "எல்லாமே பணத்துக்காகவா... " காதலனை கொன்ற கள்ளக்காதலியின் வார்த்தை.!! ஆட்டோ டிரைவர் தற்கொலை.!!
பெண்ணின் தந்தை கைது
காவல்துறை நடத்திய விசாரணையை தொடர்ந்து மணமகனின் தாயார் மீது தாக்குதல் நடத்திய மணப்பெண்ணின் தந்தை உட்பட 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை படுகொலை... முறை தவறிய உறவால் விபரீதம்.!! காதலானுக்கு வலை வீச்சு.!!