#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விமான நிலையத்தில் தீபிகா படுகோனேயே திணறடித்த செக்யூரிட்டி.! வைரலாகும் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இவருக்கென இந்திய அளவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் இவரை தெரியாதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு தீபிகா படுகோனே பிரபலமாக உள்ளார். இந்நிலையில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் தீபிகா படுகோனே சமீபத்தில் படப்பிடிப்பிற்கு செல்ல மும்பை விமான நிலையத்திற்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாப்பு வீரரை தாண்டி சென்ற போது அவர் அடையாள அட்டை காட்டிவிட்டு செல்லுமாறு தீபிகா படுகோனேவுடன் கூறியுள்ளார். உடனே திரும்பி உள்ளே சென்ற தீபிகா மிகவும் பொறுப்புடன் அவருக்கு மரியாதை கொடுத்து தனது அடையாள அட்டையை காட்டிவிட்டு சென்றுள்ளார்.
பிரபல நடிகையாக இருந்தாலும் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்ட பாதுகாப்பு வீரருக்கும், அவருக்கு மரியாதை கொடுத்து பொறுப்புடன் இருந்த தீபிகா படுகோனேவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது