#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா, விஜய் சேதுபதியா இது.! தூள் கிளப்பும் சீதக்காதி பட டீசர், கொண்டாடும் ரசிகர்கள், வீடியோ உள்ளே.!
தமிழ்சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய் சேதுபதி. மேலும் அவர் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
இவர் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை பெரும் ஆச்சரியம் அடைய செய்வார்.மேலும் இவரை பிடிக்காதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அவர் தற்போது சீதக்காதி படத்தில் நடித்துவருகிறார் .'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் எடுத்திருக்கும் படம், 'சீதக்காதி'. வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அர்ச்சனா , ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நலன் வரவேற்பை பெற்றுள்ளது.