#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர்சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விஷேசம்.. நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்..! என்ன விசேஷம் தெரியுமா?..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட செந்தில் - ராஜலட்சுமி இருவரும் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களின் மனதில் இடம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் தனது விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டி சென்றார். இவர்கள் திரையுலகிலும் பல பாடல்களை பாடி வருகின்றனர். அத்துடன் செந்தில் சினிமாவில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருந்தார். படம் பெரும் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இவர்கள் மீண்டும் இசைகச்சேரிகளில் தங்களது நாட்டுப்புற பாடல்களை ஒலிக்க செய்தனர்.
மேலும் ராஜலட்சுமி, ராஷ்மிகா மந்தானா மற்றும் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா படத்தின் "வாயா சாமி" என்ற பாடலை பாடி அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இந்நிலையில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியின் பிள்ளைகளுக்கு விமரிசையாக காதணி விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து முகநூல் பக்கத்தில் செந்தில் கணேஷ், "எங்கள் இல்ல விழாவில் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்திய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி மதிப்புக்குரிய திரு.கவிதா ராமு அம்மா அவர்கள்" என்று பதிவிட்டிருந்தார். இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.