#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறின விஜய் டிவி பிரபலம் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி! புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சோகளில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். சில வாரங்களுக்கு முன்பு முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 இல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்திலை கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் கலந்துகொண்டனர்.
ஆரம்பம் முதலே இவறுகளுக்கென தனி ரசிகர் பாடலாமே உருவானது. சுத்தமான நாட்டுப்புற பாடல்களால் சூப்பர் சிங்கர் அரங்கத்தையே அதிரவைத்த இவர்கள் எதிர்பாராத விதமாக ராஜலக்ஷ்மி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் இறுதிவரை சென்ற அவரது கணவர் செந்தில் கணேஷ் தனது திறமையாலும், ரசிகர்களின் ஆதரவாலும் சீசன் 6 இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு இலவசமாக கிடைத்தது.
மேலும், இந்த வெற்றிக்கு பின்பு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. தனது முதல்பாடலை சிவகார்த்திகேயனுக்குப் பாடினார். சார்லி சாப்ளின் 2 வில் இவர்கள் பாடிய பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். சமீபத்தில் அந்நிகழ்ச்சிக்கான `மேக்ஓவர் ரவுண்ட்’ எனும் டாஸ்கிற்காக இருவரும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான கெட்அப்பில் வந்து கலக்கினார்கள்.
இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வாரம் ஞாயிற்று கிழமையில் இவர்கள் இருவரையும் இந்த கெட்டபில் பார்க்கலாம்.