#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட..! மௌனராகம் பேபி கிருத்திகாவிற்கு இப்படி ஒரு திறமையா..! வைரல் வீடியோ இதோ!
மௌன ராகம் சீரியல் பேபி கிருத்திகாவின் மாஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மாபெறும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று மௌனராகம். சக்தி என்ற பெண்ணை குழந்தையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரில், தொடரின் நாயகியாக நடித்த குட்டி குழந்தையின் பெயர் கிருத்திகா.
இந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு கிருத்திகாவின் அழகிய நடிப்பும், அவரது கதாபாத்திரமும் கூட ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக, பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
சீசன் ஒன்றில் குட்டி குழந்தையாக நடித்த கிருத்திகா தற்போது பல்வேறு சினிமா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் அவர் விஷால் நடிப்பில் உருவான சக்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளார். அதில் சீரியல் நடிகை நீலிமா ராணியின் மகளாக நடிக்கிறார் பேபி கிருத்திகா.
ஷூட்டிங்கில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலகளில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் கிருத்திகா. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள குத்தாட்டம் போட்டும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கிருத்திகாவின் நடனத்தை பார்த்த ரசிகர்கள், நடிப்பையும் தாண்டி அவருக்கு மிகவும் அழகாக நடனமாடும் திறமையும் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.