#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சீரியல் நடிகை ஆனந்தியின் அழகிய மகனை பார்த்திருக்கீங்களா!! வைரலாகும் புகைப்படம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆனந்தி. இவர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மிக சிறந்த நடன சூறாவளியாக இவர் அதனை தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
இவ்வாறு பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த ஆனந்தி தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களிலும் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆனந்தி, அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணத்தில் ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தைக்கும் நடிகர் ஆர்யா தான் ஆர்யாவீர் என பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஆனந்தி தனது கணவர் மற்றும் அழகிய மகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.