விஜய் டிவியில் இருந்து சன் டிவி பக்கம் தாவும் பிரபல நடிகை.. யார் தெரியுமா..? வருகிறது புத்தம் புது சீரியல்..



Serial actress anu acting in Sun Tv serial

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த பிரபல நடிகை தற்போது சன் தொலைக்காட்சி சீரியல் பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற ஆபிஸ், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் அனு. அதன்பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Sun tv

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அனு, அந்த தொடரில் கொலை செய்யப்பட்டதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அந்த தொடரில் இருந்து விரைவில் வெளியேறுவார் என தெரிகிறது.

Sun tv

அதேநேரம், அனு விரைவில் சன் தொலைக்காட்சியில் நடிக்க இருப்பதாகவும், சரித்திர கதையை பின்னணியாக கொண்ட புது சீரியல் ஒன்றில் தான் நடிக்க இருப்பதாக அனு தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.