நோண்டிகிட்டு, தடவிட்டு இருப்பானே அவன் எங்க? - பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அர்னவ் சர்ச்சை பேச்சு.!



Arnav Talks about Jeffry on Abusive Language 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இறுதிக்கட்டத்தை நோக்கி எட்டி இருக்கிறது. போட்டியில் எஞ்சி இருப்போரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துவிட்டது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு போட்டித்தன்மை அதிகரிக்கும் பொருட்டு, இந்த சீசனில் கலந்துகொண்டு எவிக்சன் ஆகிய போட்டியாளர்கள் பலரையும், பிக் பாஸ் நிர்வாகம் வீட்டில் மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. நடப்பு வாரத்தில் மிட் வீக் எவிக்சன் முறையும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜே விஷாலின் தோழிகள்:
இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று எலிமினேஷன் முறையில் வெளியேறிய அர்னவ், பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். அவர் போட்டியாளர்களிடம் உரையாடியபோது, விஜே விஷாலை அன்ஷிதா, தர்ஷிகா ஆகியோருடன் காதல் உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார். அப்போது விஷால் இருவரும் எனது நண்பர்கள் என பதில் அளித்தார். 

இதையும் படிங்க: Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!

ஜெப்ரி குறித்து சர்ச்சை பேச்சு

அதனைத்தொடர்ந்து, ஜெப்ரி குறித்து அர்னவ் பேசத்தொடங்கியபோது, "இங்கு ஒருத்தன் நோண்டிகிட்டு, தடவிட்டு இருப்பானே, அவன் எங்கே?" என கேட்டார். இதனால் அதிருப்தியடைந்த போட்டியாளர்கள் அர்னவ் கேள்வி எழுப்பிய விதம் தவறு என அவரிடம் சண்டையிட பாய்ந்தனர். பின் அந்த வாதம் சமாதானத்தில் முடித்து வைக்கப்பட்டது. ரவீந்தரும் அர்னவுக்கு இப்படி பேசியது தவறு என தெரிவித்தார். அர்னவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

அர்னவின் செயல்பாடுகளை கண்டித்த முத்துக்குமரன்

இதையும் படிங்க: Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!