பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. பாரதியா இது! கெட்டப் மாறி இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அந்த தொடர் தற்போது நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டுள்ளது.
பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண் பிரசாத். இவர் தொடரில் டாக்டராக நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததற்கு பிறகு அவர் மக்களிடையே பெருமளவில் ரீச்சாகி அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அருண் இதற்கு முன்பு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் பிஸியாக இருக்கும் அவர் அண்மையில் தனது பிறந்தநாளை வட மாநிலத்தில் கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீசை, தாடி இல்லாமல் அடையாளம் தெரியாத அளவிற்கு வேறு கெட்டப்பில் உள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பாரதியா இது என ஷாக்காகியுள்ளனர்.