#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
38 வயதில் காதலரை கரம்பிடித்த பிரபல சீரியல் நடிகை! அட.. யார்னு பார்த்தீங்களா! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற காதலிக்க நேரமில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவர் தமிழில் கோலங்கள், வசந்தம், மகள், துளசி, சொந்தபந்தம், பாசமலர் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.
மேலும் அவர் வெள்ளித்திரையிலும் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, ரஞ்சித் நடித்த அதிகாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சின்னத்திரையில் 18 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். 38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.
நடிகை சந்திரா தற்போது ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த தொடரில் அவருடன் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.