#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. விஜய் டிவி சீரியலை விடாமல் பார்க்கும் நடிகை அனுஷ்கா..! எந்த சீரியல் தெரியுமா?.! பார்த்துவிட்டு என்ன செய்துள்ளார் பாருங்க..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்ற நெடுந்தொடர் தொடங்கிய நாள் முதலே TRPயில் டாப்பில் உள்ளது. இந்த தொடர் மதியவேளையில் ஒளிபரப்பாகி வருவதை தொடர்ந்து, வினோத் மற்றும் பவித்ரா இருவரும் நாயகன் - நாயகியாக நடிக்கின்றனர்.
அத்துடன் பல டுவிஸ்டுகள் நிறைந்து, அதிரடி காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சீரியல் குழுவினருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால், பாகுபலி, அருந்ததி, சிங்கம் போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை அனுஷ்கா இந்த தொடரின் நாயகி பவித்ராவிற்கு போன் செய்துள்ளார்.
மேலும், இந்த சீரியலின் நிறைய எபிசோடுகளை பார்த்துள்ளதாகவும், சீரியல் மிகவும் நன்றாக இருப்பதாக தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக நாயகி பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.