#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு குட்டியை உயிருடன் கையில் ஏந்தி நிற்கும் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.
சன் டிவி சீரியல் நடிகை ப்ரவீனா தனது கையில் நாக பாம்பு குட்டியை பிடித்து வைத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த பிரவீனா. பிரியமானவன் தொடர் முடிவுக்கு வந்தநிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகராசி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், தனது குடும்பத்துடன் கேரளாவில் தங்கியிருந்த நிலையில், அவரது வீட்டிற்குள் திடீரென நாக பாம்பு ஓன்று புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து ப்ரவீனாவின் வீட்டை சுற்றி சோதனை செய்ததில் அங்கிருந்த கோழிக்கூடு அருகே பிறந்து சில நாட்களே ஆன நாக பாம்பு குட்டி ஓன்று இருந்துள்ளது.
குட்டியாக இருந்தாலும் நாக பாம்புக்கே உரித்தான படம் எடுக்கும் தோரணையுடன் அந்த குட்டி படம் எடுத்துள்ளது. ஆனால், குட்டி ஒன்றும் செய்யாது என கூறியதை அடுத்து பிரவீனா அந்த குட்டியை தனது கையில் வாங்கிக்கொண்டு அதை வீடியோ எடுத்து இணையாயத்தில் வெளியிட்டுள்ளார்.