#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்! நடுக்கடலில் ராஜாராணி சீரியல் நடிகைக்கு கணவர் கொடுத்த செம அசத்தலான சர்ப்ரைஸ்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த கதகளி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி. அதனைத் தொடர்ந்து அவர் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்க்கார், பைரவா, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் ராஜாராணி, லட்சுமி வந்தாச்சு, மாப்பிள்ளை என ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது மகராசி மற்றும் கோகுலத்தில் சீதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகை வைஷாலி கடந்த ஆண்டு சத்யதேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் வைஷாலி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் தனது மனைவிக்கு வித்தியாசமாக சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணிய சத்யா கடலின் நடுவில் படகில் அசத்தலாக டெக்கரேட் செய்து நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.