#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த சீரியலுக்காக பிரபல நடிகை வைஷாலி எடுத்த செம ரிஸ்க்! தீயாய் பரவும் வீடியோ! அதிர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் கதகளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை வைஷாலி. அதனை தொடர்ந்து அவர் காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி என ஏராளமான தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி, விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டார் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை வைஷாலி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கோகுலத்தில் சீதை தொடரிலும் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஆஷா கவுடா, நந்த கோபால், நடிகை நளினி, நந்தினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை வைஷாலி கோகுலத்தில் சீதை சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வைஷாலியை ஸ்டெண்ட் கலைஞர்கள் கயிறு கட்டி மேலே தூக்க, அவர் அந்தரத்தில் தொங்குகிறார். டூப் போடாமல் நடித்த இந்தக் காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், சீரியலோ, திரைப்படமோ அதில் அர்ப்பணிப்புதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.