#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார் படம் செருப்பால் அடிச்சது போல் இருந்துச்சு: நடிகையின் ஓப்பன் டாக்!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளி அன்று வெளியானது சர்க்கார் திரைப்படம்.
சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
சர்கார் படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் சினிமா ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் சர்கார் பார்க்க ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் சர்கார் பற்றி பேசியுள்ள பிரபல சீரியல் நடிகை சித்ரா, சர்கார் படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். செருப்பால் அடித்தது போல இருந்தது என கூறியுள்ளார்.
ரசிகர்கள் அனைவரையும் இந்த படம் சமூக பிரச்சனை பற்றி பேசவைத்ததை தான் அவர் இப்படி பேசியுள்ளார்.