#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு அதற்குள்ளே இப்படியொரு ஆசையா? ஆனாலும் செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பின்னர அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
அவர்களது மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும் தமிழில் அவரது தந்தை போனிகபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது தயாரிப்பிலேயே மீண்டும் அஜீத்தின் அடுத்த படம் உருவாக்கவுள்ளது. இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜான்வி கபூர் தனது திருமணம் குறித்த ஆச்சரியமிக்க தகவலை வெளியிட்டுள்ளார். அப்பொழுது அவர் காஞ்சிப் பட்டு அணிந்து, தமிழ்ப்பெண்ணாக அலங்கரித்து , இட்லி,சாம்பார், தயிர்ச்சாதம் போன்ற தென்னிந்திய உணவு விருந்துடன் எனது திருமணம் மிக எளிமையாக திருப்பதியில் நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் எனது வருங்காலக் கணவர் தனது திறமை மீது நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும்.அவர் நகைச்சுவை உணர்வுமிக்கவராக இருக்கவேண்டும். அதைவிட என்னைக் கண்மூடித்தனமாகக் காதலிப்பவராக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.