#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்.. பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா போலிஸில் புகார்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் அதே டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்கும்போது சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இதில் நடிகை ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அதேபோல் நடிகர் தினேஷ் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் மாங்காடு காவல் நிலையத்தில் நடிகர் ரக்ஷிதா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தினேஷ் ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும் அடிக்கடி கால் செய்து ஆபாசமாக பேசி மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தினேஷ் ஆஜராகிய நிலையில் ரக்ஷிதாவிற்கு விவாகரத்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம் என தெரிவித்துள்ளார் மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.