#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அட்லீ இயக்கத்தில், நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு, சுனில், ரியாஸ் கான் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.
ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு பின்னர் ஜவான் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முழுவதும் ஆக்சன் காட்சிகளை கொண்ட ஜவான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரூ.220 கோடி செலவில் தயாராகியுள்ள ஜவான் திரைப்படத்தை, ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் கேட்டு கடந்த சில நாட்களாகவே படக்குழுவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாளை படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.