#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.250 கோடியை கடந்த ஷாருக்கானின் டங்கி பட வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில், நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் டங்கி.
இப்படத்தை ராஜ் குமார் ஹிரானி இயக்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (டிசம்பர் 21, 2023) அன்று படம் உலகளவில் வெளியானது.
சர்வதேச அளவில் டங்கி திரைப்படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்லபடியான வசூலை தந்தாலும், படக்குழு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
ஏனெனில் இந்த ஆண்டில் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் ரூ.1000 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்திருந்தது.
இந்நிலையில், டங்கி திரைப்படம் உலகளவில் 5வது நாளில் ரூ.256.40 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.24.32 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.