தந்தை, தாய் இருவரும் வடமாநிலத்தவர், ஆனால் நான் மட்டும் தமிழர் திருநாள் தான் கொண்டாடுவேன்!



Shakshi open talk

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. ஆனால் இதற்கு முன்பு காலா, விஸ்வாசம் போன்ற பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதிலும் இவருடைய பேச்சுக்கும், தோழிக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற செயல்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Shakshi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய அவ்வா அவ்வா மனசு வலிக்குது என்ற டயலாக் அனைவரிடமும் பிரபலமானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சாக்‌ஷி இவ்வாறு கூறியுள்ளார். 

அதாவது தந்தை ராஜஸ்தான், தாய் பஞ்சாப் ஆனால் நான் மட்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தான் கொண்டாடுவேன். மேலும் பொங்கள் திருநாளை கொண்டாடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.