#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. அடிக்கிற வெயிலில் இது வேறயா! ஒட்டகத்தின் மீது ஒய்யாரமாக ஷாலு ஷம்மு! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக, கருப்பழகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஷாலு சம்மு சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருந்துவருகிறார். மேலும் அவர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கைவசம் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது ராஜஸ்தானுக்கு சுற்றுலா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் ஒட்டக சவாரி செய்துள்ளார். இந்த நிலையில் ஒட்டகத்தின் மீது ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை ஷாலு சம்மு பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் ஒட்டகத்தின் மீது குதிரை என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.