ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான்.! என்ன காரணம்..



Sharuk khan denied to act in rajinikandh movie

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படத்திற்கு "வேட்டையன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து "தலைவர் 171" படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.

Sharuk

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினி நெகட்டிவான கேங்ஸ்டர் ரோலில் நடிக்கிறார் என்றும், சிவகார்த்திகேயனும் இப்படத்தில் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஷாருக்கானை நடிக்க கேட்டதாகவும், அவர் மறுத்து விட்டதால், ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் மலையாளத்தில் இருந்து மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

Sharuk

மேலும் வில்லனாக எஸ். ஜே. சூர்யா, அருண் விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்றும், ரன்வீர் சிங்கின் கால்ஷீட் உறுதியாகி விட்ட பிறகு தான் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் ரஜினிகாந்த் திரைப்படத்தில் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த காரணம் என்ன என்று கேட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.