பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"பிரபல இந்துக் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான்!" வீடியோ வைரல்!
1980களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ம் ஆண்டு "தீவானா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் ஷாருக்கான். இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை பலமுறை வென்றுள்ளார். மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உள்ளார்.
மேலும் ஹைதராபாதில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் இவர் தமிழிலும் ஹே ராம், சாம்ராட் அசோகா, தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் "டன்கி" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஷாருக்கான் இன்று அதிகாலையில் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக ஷாருக்கான் இங்கு சாமி தரிசனம் செய்கிறார். முன்னதாக ஜவான் மற்றும் பதான் படங்கள் வெளியாவதற்கு முன் இந்தக் கோவிலுக்கு சென்றிருந்தார். தற்போது தேவஸ்தான அதிகாரிகள் ஷாருக்கானை அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.