#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Shah Rukh Khan's Pathaan: கால்கள் இல்லாதபோதிலும், நண்பரின் உதவியோடு பதான் திரைப்படம் பார்க்க வந்த ஷாருக்கானின் ரசிகர்..!
மாற்றுத்திறனாளி ரசிகர் தனது நண்பரோடு ஷாருக்கானின் பதான் திரைப்படம் பார்க்க வந்தார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உட்பட பலர் நடித்து கடந்த 25 ம் தேதி வெளியான திரைப்படம் பதான். இப்படம் பாலிவுட்டில் ஷாருக்கான் ரசிகர்களிடையே பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், படத்தில் இருந்த முதல் பாடலில் நடிகை காவி உடையணிந்து கவர்ச்சியாக நடனமாடியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்தது. படம் வெற்றிகரமாக உலகெங்கும் வசூல் செய்து வருகிறது.
A disabled fan of @iamsrk, who cannot walk on his own feet. He rode on his friend's shoulder from Bhagalpur in Bihar to watch the movie #Pathaan at Samsi Pawan Talkies cinema hall in Malda, West Bengal. #Pathaan100crWorldwide
— JUST A FAN. (@iamsrkfan_brk) January 26, 2023
pic.twitter.com/dPzKJM175x
இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் ஷாருக்கானின் ரசிகர், தனது கால்கள் இல்லாத போதிலும் நண்பரின் உதவியோடு படம் பார்க்க ஸம்ஸி பவன் திரையரங்குக்கு வந்துள்ளார். இதனை ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.