#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்டகாசமாக வெளியானது நவயுக கண்ணகி படத்தின் டிரைலர்: லிங்க் உள்ளே.!
ஷார்ட்ப்ளிக்ஸ் வலைத்தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள நவயுக கண்ணகி திரைப்படம், விரைவில் அத்தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான கருத்துக்களை மையமாக வைத்து நவயுக கண்ணகி தயாராகி இருக்கிறது. காதல் சார்ந்த கருத்துக்களில் தொடங்கி, பெண் சந்திக்கும் பிரச்சனைகளும் டிரைலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த படத்தில் பவித்ரா தென்பாண்டியன், விமல்குமார், இ டென்சல் ஜார்ஜ், தென்பாண்டியன் கே, ஜெயபிரகாஷ், சுகந்தி குமார், குடியாத்தம் குமார், மைதிலி குமார், லட்சுமி, மோகன் குமார் தங்கராஜ், இளங்கோ, சரஸ்வதி, வாஞ்சிநாதன், நிதிஷ் பாஸ்கரன், இந்திரன் மாருதிராஜ், கிரண். எஸ், சி.என் பிரபாகரன், பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.