#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்! நடிகை ஸ்ருதி ஹாசனா இது! குட்டி பாப்பாவா எவ்ளோ கியூட்டா இருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். துவக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்த ஸ்ருதிஹாசன் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதி 3, பூஜை, சிங்கம் 3, புலி,வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2009இல் ஹிந்தியில் வெளியான லக் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தனது குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.