#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"டெல்லி நார்த் ஈஸ்ட் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் சுருதி ஹாசன்!" வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் திகழ்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். 1992ம் ஆண்டு வெளியான "தேவர் மகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "போற்றிப் பாடடி பெண்ணே" பாடலை பாடி அறிமுகமானார் ஸ்ருதி.
தொடர்ந்து ஹே ராம் படத்தில் இடம்பெற்ற ராம் ராம், வாரணம் ஆயிரம் படத்தின் அடியே கொல்லுதே, உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் வானமே எல்லை, உன்னைப்போல் ஒருவன், 3 படத்தில் கண்ணழகா காலழகா, என்னமோ ஏதோ உள்ளிட்ட பல பாடல்களை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட "மான்ஸ்டர் மெஷின்" என்ற ஆல்பம் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள நார்த் ஈஸ்ட் திருவிழாவில் வரும் 23ம் தேதி ஸ்ருதி தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
முன்னதாக ஸ்ருதி ஹாசன் லண்டனில் பல முக்கிய அரங்குகளில் பலமுறை இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். மேடை நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வமுள்ள ஸ்ருதி ஹாசன் தற்போது இந்த டெல்லி நிகழ்ச்சியை ஆர்வமுடன் எதிர்பாத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.