போன் நம்பர் கேட்ட ரசிகர்! டக்கென அனுப்பி செம ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்! என்ன நம்பர்னு பார்த்தீங்களா!!



shruthi-send-phone-number-to-fan

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் சூர்யா, தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம்வர துவங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார்.

பாடல், நடிப்பு, நடனம் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் ஸ்ருதிஹாசன் விஜய்சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது கைவசம் பிரபாஸ் உடன் சலார் என்ற படமும் உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தான் ஒர்க்அவுட் புகைப்படங்கள், காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது வெளியிடுவார்.

Shruthi

இந்நிலையில் அவர் அண்மையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களது போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி டக்கென 100 என கிண்டலாக பதிலளித்துள்ளார். இவரது இந்த பதிலை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.