#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹோட்டலில் சுருதிஹாசன் செய்த குறும்புத்தனம்! வீடியோ எடுத்து வெளியிட்ட தோழி
ஐபிஎல் தொடரின் 8வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய இந்த போட்டியை காண நடிகர் கமல்ஹாசனின் மகளான சுருதிஹாசன் தனது தோழிகளுடன் நேரில் சென்றிருந்தார். ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக ஆராவாரம் செய்த சுருதிஹாசன், தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட செல்பியை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த போட்டியை காண வருவதற்கு முன்பு ஹோட்டலில் தோழிகளோடு மிகவும் குஷியாக இருந்துள்ளார் சுருதிஹாசன். சின்னப்பிள்ளை போல் அவர் செய்யும் குறும்பு சேட்டையை படம்பிடித்த அவரது தோழி அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்
😂 Crazy but Cute ❤❤❤@shrutihaasan 😘 Love You Sweetie ✨#ShrutiHaasan pic.twitter.com/Cmf8vZfEcV
— Shruti|Sarah👑 (@Saraansariii) March 29, 2019
சுருதிஹாசனை பொறுத்தவரை தமிழைவிட தெலுங்கில் தான் ரசிகர்கள் அதிகம். தமிழில் இவருக்கு சொல்லும்படியாக எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கேற்றார் போல் தனது அன்பை ஹைதராபாத் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார் சுருதிஹாசன்.
தமிழில் 2010 ஆம் ஆண்டு அறிமுகமான சுருதிஹாசன் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், தெலுங்கை தவிர ஹிந்தியிலும் நடித்து வருகிறார் சுருதிஹாசன்.